பதிவு செய்த நாள்
13
ஆக
2019
01:08
பொன்னேரி:திருவேங்கிடபுரம், பொன்னியம்மன் கோவிலில், 40ம் ஆண்டு ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
பொன்னேரி அடுத்த, திருவேங்கிடபுரம் பகுதியில், பொன்னியம்மன் கோவில் உள்ளது. கோவி லில், 40ம் ஆண்டு ஆடித் திருவிழா, 9ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கரகம் புறப்படுதல் நிகழ் ச்சியுடன் தொடங்கியது.அதை தொடர்ந்து, 10ம் தேதி, கரகம் புறப்படுதல், சிறப்பு பட்டி மன்றம், மங்கள இசை ஆகியவை நடந்தன.
விழாவின், 3ம் நாளான நேற்று முன்தினம் (ஆக., 11ல்), காலை, கரகம் புறப்பாடும், கூழ்வார்த் தல், வடை பொங்கல் வைத்தல், வெகு விமரிசையாக நடந்தன.
மாலை, 5:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. இரவு, 7:00 மணிக்கு வீதியுலா புறப்பட்ட அம்மன், பொன்னியம்மன் நகர், திருவேங்கிடபுரம், உப்பரபாளையம், சாய் நகர், தசரதன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வீதியுலா, நேற்று காலை, 10:00 மணிக்கு முடிந்து, அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆடித் திருவிழாவில்,
நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை நெஞ்சுருக வணங்கி சென்றனர்.