பதிவு செய்த நாள்
13
ஆக
2019
01:08
காஞ்சிபுரம்:பாலஷேத்ராலயா வித்வ சபை சார்பில், நிருத்திய அரங்கேற்றம், காஞ்சிபுரத்தில் நடந்தது.
பரதநாட்டியக் கலை, நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என, மூன்று ஆடல் முறைகளைக் உடையது. இதில், காஞ்சிபுரம் மற்றும் சென்னையில், நடனப் பள்ளி நடத்தி வரும், டாக்டர் ஸ்ரீமதி தனலட்சுமி பாலமணிகண்டனின், பாலஷேத்ராலயா வித்வ சபை சார்பில், நிருத்திய அரங்கேற்றம், காஞ்சிபுரத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு இசைக் கல்லுாரி விரிவுரையாளர், டாக்டர் ஜி.தனசுந்தரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். எம்.மஹாவித்யா, எம்.யு.காவ்ய ரோஷினி, எஸ்.ரித்து கஸ்துாரி, நி.செ.காயத்திரி ஆகியோரின் நிருத்திய அரங்கேற்றம் நடந்தது.இதில், உருப்படிகள், ராகம், தாளம் ஆகிய நடன நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீமதி தனலட்சுமி பால மணிகண்டனின் நட்டுவாங்க மும், வடிவேலுவின் மிருதங்கமும், ஸ்ரீமதி பத்மா யுவராஜின் குரலிசையும், நிம்மல் வர்ஷ னின் புல்லாங்குழல் இசையும் நடந்தது.