பதிவு செய்த நாள்
13
ஆக
2019
01:08
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூரில் கங்கையம்மன் கோவில் சன்னிதி உள்ளது.
இக்கோவிலில், முத்து மாரியம்மன் சிலையை வைத்து, நீண்ட காலமாக, அப்பகுதிவாசிகள் வழிபட்டு வந்தனர்.இந்நிலையில், போதிய இடவசதி இல்லாததால், முத்து மாரியம்மனுக்கு என, தனியாக கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது.அதன்படி, கிராம மக்கள் சார்பில், முத்து மாரியம் மன் கோவில் கட்டுமானப் பணி, ஓராண்டாக நடந்தது. பணி முழுமையாக நிறைவு பெற்றதை யடுத்து, நேற்று (ஆக., 12ல்), மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.நேற்று (ஆக., 12ல்) காலை, நான்காம் யாகசாலை பூஜை, நாடிசந்தனம், கலசம் புறப்பாடு நிகழ்ச்சிகளை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமானோர் அம்மனைத் தரிசித்தனர்.