பதிவு செய்த நாள்
14
ஆக
2019
02:08
கிள்ளை:கிள்ளையில் காளியம்மனுக்கு, மஞ்சள் நீர் விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது. கிள்ளை யில் காளியம்மன் கோவிலில், கடந்த 11ம் தேதி இரவு தெப்ப திருவிழா முடிந்து, தொடர்ந்து அம்மனுக்கு சிறப்புபூஜைகள் நடந்து வந்தது. நேற்று (ஆக., 13ல்( காளியம்மனுக்கு மஞ்சள் நீர் விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது.காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோவிலில் இருந்து ஊர்வலமாக, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூஜைகள் நடந்தது.
அப்போது, இளைஞர்கள், ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்ந்தனர்.நிகழ்ச்சியில், கிராம நிர்வாகிகள் கவியரசன், வீரத்தமிழன், சிற்றம்பலம், முன்னாள் மீனவர் கூட்டுறவு வங்கி தலைவர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.