மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், சிறுமுகை ரோடு கிழக்கு வீதியில, உள்ள, முனீஸ்வரர் கோவிலில், 19ம் ஆண்டு உற்சவ பெருவிழா நடந்தது.கடந்த, 6ம் தேதி பூச்சாட்டுடன் விழா துவங் கியது. ஒவ்வொரு நாளும் முனீஸ்வரருக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. விழா வின் முக்கிய நாளான நேற்று, (ஆக., 13ல்) முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.