பதிவு செய்த நாள்
14
ஆக
2019
03:08
சென்னிமலை: பெருந்துறையை அடுத்த, பட்டக்காரன்பாளையத்தில், மதுரைவீரன் சுவாமி கோவில் பொங்கல் விழா, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது.
நடப்பாண்டு விழா கடந்த மாதம், 14ல் தொடங்கியது. மொத்தம், 15 நாட்கள் நடக்கும் திருவிழா காலத்தில், சுவாமிக்கு தினமும் சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. 14வது நாளான நேற்று (ஆக., 13ல்), காவிரியிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்று (ஆக., 14ல்) முக்கிய நிகழ்வான மாவிளக்கு எடுத்து வருதல், கிளி பிடித்தல், பொங்கல் வைபவம், பரண் ஏறுதல், கிடாய் வெட்டுதல், உச்சி பூஜை நடக்கிறது. இதையடுத்து மாலை, 6:00 மணிக்கு மேல், மதுரை வீரன் பந்தம் எனப்படும், தீப்பந்த ஆட்டம் நடக்கிறது. நாளை (ஆக., 15ல்) மஞ்சள் நீராட்டத்துடன், விழா நிறைவு பெறுகிறது.