பதிவு செய்த நாள்
14
ஆக
2019
03:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவில் உள்ள, மஹா ராஜகாளியம்மன் கோவிலில், ஆடி மாதம் முழுவதும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இக்கோவிலில் கடந்த ஜூலை, 17 முதல் வரும், 17 வரை அனைத்து நாட்களிலும் உபயதாரர் களால் காலை, 6:00 மணி முதல், 8:00 மணி வரை ராஜகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சி யாக, இன்று (ஆக., 14ல்) அம்மன் நகர்வலம், நாளை அம்மனுக்கு குளிர் கும்பமும் நடக்கவுள்ளது.