பதிவு செய்த நாள்
14
ஆக
2019
03:08
வீரபாண்டி: மூலவர் அம்மன், சாக்லெட் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், செங்குந்தர் சின்ன மாரியம்மன் கோவிலில், கடந்த, 31ல், ஆடி திருவிழா பூச் சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று (ஆக., 13ல்) காலை, 8:00 மணிக்கு சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல், மாலையில், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.
மூலவர் அம்மனுக்கு, பல வண்ண சாக்லெட்டுகளை கொண்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று காலை, பூவோடு எடுத்தல், அக்னி கரகம், பூங்கரகம், கூழ் படைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஆக., 15ல்), பொங்கல் வைத்தல், கம்பம் எடுத்து கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 16 காலை 3:00 மணிக்கு, பூந்தேரில் அம்மனை எழுந்தருளச் செய்து, திருவீதி உலா வரச்செய்வர். ஆக., 17 காலை, மஞ்சள் நீராடல், வசந்த விழாவுடன், திருவிழா நிறைவடையும்.
இன்று (ஆக., 14ல்) தேரோட்டம்: ஆட்டையாம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடித் திருவிழா, ஜூலை, 31ல் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. நேற்று (ஆக., 13ல்) காலை, கோவில் முன், குண்டம் இறங்கும் இடத்தை சுத்தம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இரவு, அம்மன், மலர் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இன்று (ஆக., 14ல்) காலை, குண்டம் இறங்குதல், மதியம் தேரோட்டம் நடக்கவுள்ளது. இதற்காக, கோவில் முன் நிறுத்தப்பட்டுள்ள தேரை சுத்தம் செய்து, மஞ்சள் குங்குமம் பூசி, துணி போர்த்தி அலங்கரித்து வைத்துள்ளனர்.