பதிவு செய்த நாள்
16
ஆக
2019
02:08
மேட்டுப்பாளையம்:சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மேட்டுப்பாளையம், காரமடை கோவில் களில், இன்று (ஆக., 16ல்) சிறப்பு வழிபாடும், பொது விருந்தும் நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதியம், 12:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதையடுத்து, பொது விருந்து நடைபெற உள்ளது. எனவே, இந்த சுதந்திர தின சிறப்பு வழிபாட்டில் பொது மக்கள் பங்கேற்கும் படி, கோவில் உதவி கமிஷனர் ஹர்சினி, பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதேபோல, காரமடை அரங்கநாதர் கோவிலிலும், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதியம், 12:00 மணிக்கு சிறப்பு வழிபாடும், பொது விருந்தும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.