பதிவு செய்த நாள்
16
ஆக
2019
02:08
காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழா இறுதி நாளான நேற்று, பஞ்ச மூர்த்திகளுக்கு விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில், அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் மாங்கனி திருவிழா நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலம் நடைபெற்ற இத்திருவிழாவின் இறுதி நாளான நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது. அதை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பின் சந்தனம், மஞ்சள், பால், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவங்களால் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.