பதிவு செய்த நாள்
16
ஆக
2019
03:08
சிதம்பரம்: சுதந்திர தினத்தையொட்டி சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் சம பந்தி விருந்தில் எம்.எல்.ஏ., பாண்டியன் கலந்துகொண்டார்.இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் சுதந்திர தினத்ைதயொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது.நேற்று (ஆக., 15ல்) காலை தில்லைக் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதைனகள் நடந்தது.
பின்னர் கோவில் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். கோவிலில் சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் தலைமையில் பொது விருந்து நடந்தது.கோவில் நிர்வாக அலுவலர் ராஜா சரவணக்குமார், ஆய்வாளர் சீனிவாசன், நகராட்சி கமிஷ்னர் சுரேந்தர் ஷா, மேலாளர் நந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., செல்விராம ஜெயம், நகர செயலாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் குமார், கூட்டுறவு சங்க தலைவர் சண் முகம், அசோகன், கோவில் அலுவலர்கள் வாசு, ராஜ்குமார், ராமலிங்கம், மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.