மங்கலம்பேட்டை கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2019 03:08
மங்கலம்பேட்டை: கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் நடந்த பவுர்ணமி பூஜையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வ நாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் நேற்று (ஆக., 15ல்) பவுர்ணமி பூஜை நடந்தது. இதையொட்டி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை, பகல் 1:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.