பதிவு செய்த நாள்
16
ஆக
2019
03:08
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், ரிக், யஜூர் ஆவணி அவிட் டம் நேற்று (ஆக., 15ல்) நடந்தது.
ரிக், யஜூர் வேதத்தை சேர்ந்தவர்களுக்கு ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 5:00 மணி முதல் பகல் 12:00 வரை ஒரு மணி நேரத்திற்குஒரு முறை குழுக்களாக பூணுால் அணியும் வைபவம் நடந்தது.இன்று (16ம் தேதி)காலை 5:30 மணிக்கு காயத்ரி ஜபம், ஹோமம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை புதுச்சேரி பிராமணர்சங்கம், சங்கர பக்த சபா செய்துள்ளது.
இதேபோல், காலை 7:30 மணிக்கு, புதுச்சேரி வெங்கட்டா நகர் விஜய கணபதி கோவிலிலும், 10:30 மணிக்கு காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலிலும், கீதாராம சாஸ்திரிகள் தலைமையில் ரிக், யஜூர் ஆவணி அவிட்டம் நடந்தது.மேலும் மகா சங்கல்பம், மகா கணபதி பூஜை, காண்ட ரிஷி தர்ப்பணம், ஹோமம், வேத வியாச பூஜை, வேதாரம்பம் நடந்தது.காயத்ரி ஜபம், ஹோ மம் மொரட்டாண்டி நவக்கிரக ஆலயத்தில் இன்று (ஆக., 16ல்) நடக்கிறது.