பதிவு செய்த நாள்
16
ஆக
2019
03:08
ஸ்ரீவில்லிபுத்துார்: அத்திவரதரை நினைத்து நாம் பிரார்த்தித்தால் நல்லது நடக்கும், என ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது; 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் எழுந்தருளி, 48 நாட்கள் தரிசிக்கும் பாக்கியத்தை உலக மக்கள் பெற்றுள்ளனர் நாளை 17ல், மீண்டும் அவர், யதாஸ்தானத்திற்கு செல்லவுள்ளார். மறுபடியும் அவரை தரிசிக்க, நாம் 40 ஆண்டு காத்தி ருக்க வேண்டும்.அத்திவரதர் வரம் தரக்கூடிய பெருமாள்.
நாம் எல்லோரும் அவரை பிரார்த்தனை செய்து கொள்வோம். இந்த உலகிலுள்ள மக்கள் ஒற்றுமையாக இருக்கவும், மழை பெய்து சுபிட்சம் பெறவும், திருமணம், வேலைவாய்ப்பு மற்றும் ஒவ்வொருவரின் வேண்டுதல்களையும், இருக்கும் இடத்தில் இருந்து மனதில் பிரார்த்தனை செய்துகொள்வோம். அத்திவரதரை பிரார்த்தித்தால் நல்லது நடக்கும்.
அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் வைப்பதா, அல்லது பக்தர்களின் தரிசனத்திற்கு நாட்களை நீட்டிப்பதா, என்பது குறித்து காஞ்சிபுரம் பெரியவர்கள், ஆன்மிகவாதிகள் முடிவு செய்யட்டும். ஆனால், இதில் அத்திவரதர் விருப்பம் எதுவோ, அதன்படி நடக்கும். நாட்டில் நல்லது நடக்க அத்திவரதர் அருள்பாலிப்பார், என கூறினார்.