சின்னாளபட்டியில் ராமஅழகர்சாமி கோயில் சந்தனக்குட விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2019 03:08
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் ராமஅழகர்சாமி கோயில் ஆடி சந்தனக்குட விழாவில், சந்தன கலய ஊர்வலம் நடந்தது.இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமியில் சந்தனக்குட விழா நடத்தப்படுகிறது.
இந்தாண்டிற்கான விழாவிற்காக, விழாக்குழுவினர் காப்பு கட்டி விரதமிருந்தனர். நேற்று (ஆக., 15ல்), விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்குட விழா நடந்தது.சின்னாளபட்டி அக்கசாலை விநாயகர் கோயிலில் இருந்து பிருந்தாவனத்திற்கு, சந்தனம் நிரம்பிய கலய ஊர்வலம் நடந்தது.
கோயிலில் விழாக்குழுவினரின் காப்பு அகற்றப்பட்டு, அனைத்து கலயங்களில் இருந்த சந்தனம் தனி பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டது. அவற்றை கரைத்து, 18-ம் படி கருப்பணசுவாமி, கோயில் கதவு, அரிவாள், வேல் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூசினர். விசேஷ அலங்காரத் துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.