கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஆவணி அவிட்டமான நேற்று 15ம் தேதி பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவலில் பிராமணர்களும், வாசவி மகாலில் ஆர்ய வைசியர்களும், கச்சிராயபாளையம் சாலையில் உள்ள மண்டபத்தில் வாணிய செட்டி யார்களும் பூணுால் மாற்றிக் கொண்டனர்.பூணுால் மாற்றும் நிகழ்ச்சியினை ராமமூர்த்தி, சேதுராமன், சுரேஷ் சாஸ்திரிகள் செய்து வைத்தனர்.
வைசியர்கள் பூணுால் போட்டுக் கொண்டு கன்னிகா பரமேஸ்வரி அம்மனை வழிபட்டனர். சிவன் கோவிலில் பிராமணர்களுக்கு சிவவழிபாட்டினை சுந்தரம், ரமணி குருக்கள் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று 16ம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் 1008 மந்திரங்களை வாசிக்கும் காயத்ரி ஜபம் நடக்கிறது.