பதிவு செய்த நாள்
16
ஆக
2019
04:08
காஞ்சிபுரம்:அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு, தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம், இதுவரை, 7.59 கோடி ரூபாய் கோவிலுக்கு வருவாய் கிடைத்தது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், ஜூலை, 1ம் தேதியில் இருந்து, அத்தி வரதர் வைப வம் நடைபெற்று வருகிறது. தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல், கடந்த மாதம் ஐந்து முறை எண்ணப்பட்டது.இம் மாதம், நேற்று முன்தினம் (ஆக., 14ல்) வரை, ஏழு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், இதுவரை, 7 கோடியே, 59 லட்சத்து, 33 ஆயிரத்து, 64 ரூபாய் கோவிலுக்கு வருவாயாக கிடைத்தது. இதில், தங்கம், 127 கிராம், வெள்ளி, 3,618 கிராம் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.