முதுகுளத்துார் செல்வி அம்மன் கோயில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2019 04:08
முதுகுளத்துார்:முதுகுளத்துார் செல்வி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 9ம் நாள் நிகழ்ச்சியாக பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து விநாயகர் கோவில், பஸ் ஸ்டாண்ட், வழிவிடு முருகன் கோவில் வழியாக முக்கிய வீதிகளில் ஊர்வலமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர். பின் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.விழாவிற்கு கவுரவ தலைவர் பாலகுருசாமி, தலைவர் வடமலையான் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமாள், துணைச் செயலாளர் கருப்பையா முன்னிலை வகித்தனர்.முதுகுளத்துார் பாசப்பறவைகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ளகிராமபக்தர்கள் கலந்து கொண்டனர்.