காஞ்சிபுரம் :திருத்தணி முருகன் கோவிலில், பங்குனி படிவிழா நடைபெற உள்ளது. பங்குனி படிவிழா, வரும் 12ம் தேதி, காலை 6 மணிக்கு, சேவற்கொடியுடன் துவங்கும். மாலை 5 மணி வரை, திருப்புகழ், பக்தி பாடல்கள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு படிபூஜையுடன், திருப்புகழ் பாடியபடி மலையேற்றம் நடைபெறும். இரவு 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு முழுவதும், மலையில் பஜனைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கடந்த மூன்று ஆண்டுகளாக, இரவு மலைக் கோவில் சன்னிதி மூடி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு, இரவு முழுவதும் கோவிலை திறந்து வைக்க முடிவு செய்துள்ளது. திருப்படி விழாக்குழு செயலர் காளத்தி இதை தெரிவித்தார்.