பதிவு செய்த நாள்
17
ஆக
2019
02:08
சென்னை: ’ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைக்க அனுமதியி ல்லை; அதுபோன்ற சிலைகளை தயாரிக்க வேண்டாம்’ என, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 2ல் கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக, ஹிந்து அமைப்புகள், இப்போதே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற் கான, ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதிக் காத வகையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வேண்டும் என, தமிழ்நாடு மாசு கட்டு ப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
● களிமண்ணால் செய்யப்பட்டு, சுடப்படாத, ரசாயன கலப்பற்ற சிலைகள், கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கு மாவு கழிவுகளால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் மட்டுமே, நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்
● நீரில் கரையும் தன்மையுடைய, எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காத, இயற்கை வர்ணங் களை உடைய, விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைக்க அனுமதி கிடையாது
●விநாயகர் சதுர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை, மாவட்ட நிர் வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டுமே கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் ஆகியோரை அணுகலாம்.
இவ்வாறு, செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.