முதுகுளத்துார் செல்வி அம்மன் கோயில் அக்னிசட்டி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2019 03:08
முதுகுளத்துார் : முதுகுளத்துார், துாரி, செல்வநாயகபுரம் கிராமத்தாருக்கு பாத்தியப்பட்ட செல்வி அம்மன் கோயில் 43ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடக்கிறது.
8ம் நாள் நிகழ்ச்சியாக காலை 7:00 மணிக்கு சங்கரலிங்க அய்யனார் கோயிலில் விழாகமிட்டி மற்றும் பக்தர்கள் சார்பில்சிறப்புபூஜைநடந்தது.அய்யனாருக்கு பால்,சந்தனம்,பன்னீர் உள்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது.பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 4:00 மணிக்கு முதுகுளத்துார் காந்திசிலை அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிசட்டி கையில் ஏந்தி ஊர்வலமாக விநாயகர் கோயில், பஸ்ஸ்டாண்ட், வழிவிடு முருகன் கோயில், பத்திரகாளியம்மன் கோயில் வழியாக செல்வி அம்மன் கோயிலை வந்தடைந்தனர். பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.