பதிவு செய்த நாள்
17
ஆக
2019
04:08
காஞ்சிபுரம்: ஆடி ஐந்தாவது வெள்ளியையொட்டி, பெரிய காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
பெரிய காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள் கோவிலில், ஆண்டு தோறும், ஆடிப்பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, 44வது ஆண்டு ஆடிப்பெருவிழா, கடந்த மாதம், 19ம் தேதி துவங்கியது. அன்று வெள்ளி கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து அன்னை ரேணுகாம்பாள், மீனாட்சி, வேப்பிலைக்காரி, தங்க கவசம், சீனிவாச அலங்காரம், முத்தழகி என, ஒவ்வொரு வெள்ளியன்றும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஐந்தாம் ஆடி வெள்ளியான நேற்று 16ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, கீழம்பி காஞ்சி பாலா குழுவினரின், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. புற்றுமாரியம்மன் அலங்காரத்தில், அன்னை ரேணுகாம்பாள் அருள்பாலித்தார்.