சிதம்பரம் : தச்சன் குளக்கரை ஆதிபராசக்தி கோவில் உற்சவத்தையொட்டி செவ்வாடை பக்தர் களின் கஞ்சி கலைய ஊர்வலம் நடந்தது.சிதம்பரம் மந்தக்கரை, தச்சன் குளக்கரை ஆதிபரா சக்தி கோவில் 13ம் ஆண்டு உற்சவம் கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனையொட்டி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சன்னதி யில் சுமங்கலி பெண்களின் திருவிளக்கு பூஜைகள், 17ம் தேதி ஓம்சக்தி சிறப்பு வழிப்பாடு நடந்தது.
பால்குடம், கஞ்சி கலயம் எடுக்கும் உற்சவம் நேற்று நடந்தது. இதனையொட்டி தில்லை யம்மன் கோவிலில் அம்மன் சக்தி கரகம், பால் குடம், கஞ்சி கலயத்திற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. 100க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலயம், பால் குடம் சுமந்து வடக்கு மெயின் ரோடு, தேரோடும் வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.