பதிவு செய்த நாள்
19
ஆக
2019
02:08
புதுச்சேரி: இந்தியாவில் பண்பாடுகள், ஆன்மிகம் இருக்கின்ற வரை, நம்மை யாராலும் அழிக்க முடியாது எனமயிலம் பொம்மபுர ஆதினம் 20-வது பட்டம் சிவஞான பாலயசுவாமிகள் அருளாசி வழங்கி பேசினர்.
புதுச்சேரி அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றத்தின் 30-வது ஆண்டு விழா நேற்றுமுன்தினம் (ஆக., 17ல்) வெங்கட்டா நகர் தமிழ் சங்கத்தில் துவங்கியது. முதல் நாளில் அருணகிரிநாதரின் திருப்புகழை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வழிமுறைகள் விவாதிக் கப்பட்டது.
இரண்டாம் நாளான நேற்று 18ம் தேதி திருப்புகழ் காட்டும் தாய்மொழி உணர்வு, புதை பொருள், கடவுள் கொள்ளை, எதிர்பார்ப்புகள் குறித்து ஆய்வாளர்கள் பேசினர். விழாவின் நிறைவு நிகழ்ச்சி ’நன்றி உணர்வு அரங்கம்’ என்ற தலைப்பில் நடந்தது.புதுச்சேரி அருணகிரிநாதர் திருப்புகழ் மன்ற நிறுவனரும், ஓய்வு பெற்ற தலைமை குற்றவியல் நீதிபதியுமான சேது முருகபூபதி தலைமை தாங்கினார். அருணாகிரிநாதர், திருவாண்டார் கோவிலை பற்றி பாடிய திருப்புகழை முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார்.
விழாவில் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-வது பட்டம் சிவஞான பாலயசுவாமிகள் அருளாசி வழங்கி பேசியதாவது: முதலாம் உலகப்போர் நடந்தபோது அனைத்து நாடுகளும் தங்களு டைய பாதி பலத்தை இழந்தன. இரண்டாம் உலக போரின்போது 90 சதவீத நாடுகள் தங்களுடைய எல்லா வளத்தையும் இழந்தன.
இதன் பிறகு விழித்து கொண்ட உலக நாடுகள் எதிர்காலத்தினை பற்றி யோசிக்க துவங்கின. பொருளாதாரத்திலும், பாதுகாப்பிலும் கவனம் செலுத்தினால் தான் நாடு நன்றாக இருக்கும் என பெரும்பாலான நாடுகள்அந்த திசையில் பயணித்தன. ஆனால் பாரத நாடு மட்டும் பொருளாதாரம், பாதுகாப்பு துறை மட்டுமின்றி, ஆன்மிகத்தையும், பண்பாட்டையும் ஒன்று சேர வளர்த்தது.
ஆனால் இன்றைக்கு எப்படியோ நமது குடும்பங்களில் மேலை நாட்டு கலாசாரம் கவலை அளிக்கும் விதமாக புகுந்துவிட்டது. இதன் விளைவு, மகனிடம் பேசுவதற்கே தந்தை மொபை லில் அப்பாய்மென்ட் கேட்கும் அளவிற்கு சூழல் உள்ளது.நம்மையெல்லாம் ஒன்றுப்படுத்திக் கொண்டு இருப்பது ஆன்மிகம் எனும் பாடல்கள் தான்.இந்தியாவில் பண்பாடுகள், ஆன்மிகம், இலக்கண, இலக்கியங்கள் நம்மிடம் இருக்கின்ற வரை, நம்மை யாராலும் அழிக்க முடியாது. இன்றைக்கு தமிழ் மொழியை பற்றி பேசுகின்றனர். உண்மையாக அவர்களுக்குதமிழ் மீது ஈடுபாடு, அவர்கள் தமிழ் மொழியை எப்படி வளர்க்கின்றனர் என்று ஆராய்ந்தால் கேள்விக்குறி தான் பதிலாக கிடைக்கிறது.
மேடையில் பேசினால் மட்டும் போதாது,தமிழ்மொழியை வளர்ப்பதை நடைமுறைப்படுத்தி செயலில்காட்ட வேண்டும். அது இன்றைக்கு தேவையாக இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில்புதுச்சேரி அருணகிரிநாதர் திருப்புகழ் மன்ற தலைவர் ரவிசங்கர், துணை செயலர் ராமதாஸ் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்புகழ் படித்தால் தெய்வமாகலாம்புதுச்சேரி ஓய்வு பெற்ற தலைமை குற்றவியல் நீதிபதி சேது முருகபூபதி பேசுகையில், திருக்குறளை மனிதன் படித்தால் மாமனிதனாக்குகிறது. மனிதன், திருப்புகழை படித்தால் தெய்வமாகிறான். இப்படிதான் தாயுமானவர் முதல் வாரியார் வரை தெய்வமாகினர் என்றார்.