பதிவு செய்த நாள்
19
ஆக
2019
03:08
சென்னிமலை: சென்னிமலை சுப்ரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி கவச கூட்டு பாராயண விழாவில், 36 முறை ஓதி ஜெபித்து, பக்தர்கள் வழிபட்டனர்.
சென்னிமலை செங்குந்தர் கைக்கோள முதலியார், கந்த சஷ்டி விழாக்குழு மற்றும் புதுச்சேரி கந்த சஷ்டி கவச பாராயணக்குழு சார்பில், கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி கவசத்தை ஒரே நாளில், 36 முறை பாராயணம் செய்யும் நிகழ்வு, நேற்று 18ம் தேதி காலை, 8:00 மணிக்கு தொடங்கி, மதியம், 1:30 மணிக்கு முடிந்தது.
முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. கூட்டுப் பாராய ணத்தை, தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: கூட்டு வழிபாடு, கூட்டு பாராயணத்துக்கு தனி வலிமை உள்ளது. உலக மக்கள் நலன் வேண்டி இதை செய்ய வேண்டும். கந்த சஷ்டி கவச கூட்டு பாராயணத்தால், நவக்கிரகங் களால் ஏற்படும் தொல்லை நீங்கும். எட்டுதிக்கு தேவர்களின் அருள் கிட்டும். உடல் ஆரோக் கியம், மன அமைதி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, சென்னிமலை செங்குந்த கைக்கோள முதலியார் கந்த சஷ்டி விழா குழு ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், ஐயப்பன், ஆசிரியர் மாணிக்கம் செய்தனர்.