ஆண்டிபட்டி :ஆண்டிபட்டி அருகே தர்மசாஸ்தா கோயிலில் பெருகி வரும் குரங்குகளால் தொந்தரவு அதிகரித்து வருகிறது. ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் உள்ள தர்மசாஸ்தா மலைக்கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரும் உணவு, மலைப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், காய்கள் இவற்றை உணவாக எடுத்து இப்பகுதியில் உலவி வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்களை அவ்வப்போது கூட்டமாக வந்து மிரட்டுகின்றன. பக்தர்களின் பொருட்களை தூக்கிக்கொண்டும் செல்கிறது. குரங்குகளால் ஏற்படும் தொல்லைகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.