மூங்கில்துறைப்பட்டு பிரம்மகுண்டத்தில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2019 03:08
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளே பிரம்மகுண்டத்தில் ஆவணித் தேரோட்டம் நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டத்தில் கடந்த 10 ந்தேதி கொடியேற்றத்துடன் தேர் திருவிழா துவங்கியது. நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங் காரம் செய்து தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, இரவு நேரங்களில் பாரதம், அம்மன் சொற் பொழிவு, கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் 17 ம் தேதி அம்மனுக்கு ஊரணிப்பொங்கல் வைத்து, தீமிதி நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் 17 ம் தேதி நடந்த தேர் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேர்த்திருவிழா நடந்தது.
இதில், முன்னாள் சேர்மேன் சீனுவாசன் தலைமையில் பொதுமக்கள் தேர் வடம்பிடித்து இழுத்து சென்றனர்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.