ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகரில் உள்ளது செல்லியம்மன் கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவிலில், நேற்று 18ல், அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.காலையில், சாய்கங்கை கால்வாய் அருகில் இருந்து பெண்கள் தலையில் கூழ் சுமந்து சென்று அம்மனுக்கு படைத்தனர். முன்னதாக, அம்மனுக்கு பால், தயிர், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.பின், மலர் மாலைகளால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, அம்மனுக்கு கூழ் படைத்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.