பதிவு செய்த நாள்
30
மார்
2012
11:03
திருவட்டார்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.தென்னிந்தியாவின் வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இந்த ஆண்டைய பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் காலை ஹரிநாம கீர்த்தனை நடந்தது. மாவட்ட தேவஸ்தான தந்திரி மாத்தூர்மடம் சங்கரநாராயணரு திருக்கொடியேற்றினார். கோயில் நிர்வாகிகள், முன்னாள் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை தீபாராதனை, ராமாயண பாராயணம், சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடந்தது. இரண்டாம் நாளான இன்று முதல் நான்காம் நாள் வரை காலை ஸ்ரீமத் பாகவத பாராயணம், சுவாமி பவனி வருதல், தீபாராதனை, ராமாயண பாராயணம், சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு கதைகளி நடக்கிறது.ஐந்தாம் நாள் ஸ்ரீமத் பாகவத பாராயணம், சிறப்பு உற்சவபலி தரிசனம், தீபாராதனை, ராமாயண பாராயணம், இரவு ஆத்மிக அரங்கம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஐயப்பன் தலைமை வகிக்கிறார். ஆதிகேசவ பக்தர் சங்க நிர்வாகி தங்கப்பழம் வரவேற்கிறார். நாராயணன் நாயர், ராஜேந்திரன் முன்னிலை வகிக்கின்றனர். தொல்லியல்துறை முன்னாள் இயக்குனர் ராமசந்திரன், பாலசந்தர், ஜெயசீலன், பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஆதிகேசவ பெருமாள் அருள்மாலை வெளியிடப்படுகிறது. சிவசங்கரன் நன்றி கூறுகிறார்.தொடர்ந்து திருவம்பாடியில் திருக்கொடியேற்று, பஜனை, சுவாமி கருட வாகனத்தில் பவனி வருதல், கதைகளி நடக்கிறது. ஆறாம் நாள் ஸ்ரீமத் பாகவத பாராயணம், சிறப்பு உற்சவபலி தரிசனம், தீபாராதனை, ராமாயண பாராயணம், இரவு ஓட்டன்துள்ளல், சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், கதைகளி நடக்கிறது.ஏழாம் நாள் காலை ஸ்ரீமத் பாகவத பாராயணம், சிறப்பு உற்சவபலி தரிசனம், தீபாராதனை, ராமாயண பாராயணம், இரவு சமய சொற்பொழிவு, சுவாமி பல்லக்கில் பவனி வருதல், கதைகளி, எட்டாம் நாள் காலை ஸ்ரீமத் பாகவத பாராயணம், சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தீபாராதனை, கதைகளி நடக்கிறது. ஒன்பதாம் நாள் காலை ஸ்ரீமத் பாகவத பாராயணம், தீபாராதனை, இரவு சிறப்பு நாதஸ்வர இன்னிசை, கருட வாகனத்தில் சுவாமி பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், கதைகளி, பத்தாம் நாள் காலை சுவாமி பவனி வருதல், எழுந்தருளல், மாலை சுவாமி கருட வாகனத்தில் ஆறாட்டிற்கு மூவாற்றுமுகம் எழுந்தருளல், தீபாராதனை, சிறப்பு நாதஸ்வர இன்னிசை, வாணவேடிக்கை, கதைகளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.