பதிவு செய்த நாள்
21
ஆக
2019
02:08
மாமல்லபுரம் : மாமல்லபுரம், நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், 23 முதல், செப்., 3 வரை நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில், ருக்மணி பாமா சமேத நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், வரும், 23ல் துவங்கி, செப்., 3ம் தேதி வரை நடக்கிறது.
இதை முன்னிட்டு, நேற்று 20ம் தேதி, கோவில் பகுதியில் பந்தக்கால் நடப்பட்டது. தினமும், மாலை, 3:00 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தி, இரவு, அலங்கார திருக்கோலத் தில்அருள்பாலிப்பார். இறுதிநாள், காலை, உறியடி கண்ணன் திருமஞ்சனம்; மாலை, வீதியுலா, உறியடி உற்சவம் நடைபெறும்.