கடலுார் ராஜகோபால சுவாமி கோவிலில் 23ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2019 02:08
கடலுார்: கடலுார், புதுப்பாளையத்தில் உள்ள பாமா ருக்குமணி சமேத ராஜகோபால சுவாமி கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் 23ம் தேதி நடக்கிறது.இதனை முன்னிட்டு வரும் 23ம் தேதி 4:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.
அன்று மாலை 6:00 மணிக்க மகா தீபாராதனை, 8:00 மணிக்கு மூலவர் ராஜகோபால பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சாரியார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியின் கலந்துகொண்டு ராஜகோபாலசுவாமி அருள் பெறும்படி பிரபு, நரசிம்மபட்டர் கேட்டுக் கொண்டுள்ளனர்.