ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம், உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சதுர்த்தி விழா அனுக்ஞை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சதுர்த்தி விழா நேற்று அனுக்ஞை, விநாயகர் வழிபாடு நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் சதுர்த்தி விழாவின் தொடர்ச்சியாக இன்று காலை 10:45 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து இரவில் குமரையா அம்பலம் அவர்களின் முதல் மண்டகப்படியாக வெள்ளி மூசிக வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகர் தினமும் இரவில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆக.,31 ல் விநாயகர் திருக்கல்யாணமும், அதைத் தொடர்ந்து மறுநாள் தேரோட்டம் நடைபெறும். செப்.2 ல் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.