உடுமலை : விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, அனுமதி பெற்று பொது இடங்களில் சிலைகள் வைக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ விநாயகர் சதுர்த்திக்கு, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தும், அமைப்பினர், சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள கோட்டா ட்சியர் மற்றும் போலீசாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். சிலைகள் களிமண்ணால் ஆனதாகவும், இயற்கை வண்ணக் கலவை கொண்டு வர்ணம் பூசியிருக்க வேண்டும். விதிமுறை களை முறையாக பின்பற்ற வேண்டும்,’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.