ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக்கூட்டம் டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் நடந்தது.
இன்ஸ்பெக்டர்கள் சரவணதெய்வேந்திரன், பாலகுரு, முருகன் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., பேசியதாவது: ஏற்கனவே அமைத்திருந்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலை அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. புதிய இடங்களில் அனுமதி இல்லை.சிலையின் உயரம், எடை குறித்த அளவில்தான் இருக்க வேண்டும். விநாயகர் சிலை அமையும் இடங்க ளில் மேற்கூரை தகரக்தினால் இருக்க வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களு க்கும் இடையூறு இன்றி சிலைகள் அமைக்க வேண்டும். ஊர்வலத்தில் பட்டாசு, ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது.
பிற மதத்தினர்கள் மனம் புண்படும்படியாக நடந்து கொள்ள கூடாது. செப். 3 -ம் தேதி போலீ சார் ஒதுக்கிய இடத்தில் பிற்பகல் 3:00 மணிக்கு ஊர்வலத்தை துவக்கி மாலை 6:00 மணிக்குள் சிலைகளைகரைத்திட வேண்டும், என்றார். விநாயகர் சிலை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.