பதிவு செய்த நாள்
24
ஆக
2019
04:08
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியலில், பக்தர்கள் ஆடி காணிக்கையாக, 10 லட்சத்து, 99 ஆயிரத்து, 522 ரூபாய் செலுத்தியுள்ளனர். சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், பக்தர்கள், காணிக்கை, நேர்த்திக்கடன் செலுத்த வசதியாக, நிரந்தர உண்டியல் ஐந்து, திருப்பணிக்கு ஒரு தனி உண்டியல், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஆடி திருவிழாவையொட்டி, கடந்த, 5ல், ஏழு இடங்களில் தற்காலிக உண்டியல் நிறுவப்பட்டது. அம்மனை தரிசித்த பக்தர்கள், உண்டியலில், பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக் கையாக செலுத்தி, வேண்டுதலை நிறைவேற்றினர். அனைத்து உண்டியல்களும், நேற்று முன்தினம் 22ல் திறக்கப்பட்டு, இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எண்ணப்பட்டன. செயல் அலுவலர் ராஜாராம் தலைமையில், 44 பேர், காணிக்கை எண்ணும் பணியில் ஈடு பட்டனர். அதில், 10 லட்சத்து, 20 ஆயிரத்து, 424 ரூபாய், தங்கம், 26 கிராம்; வெள்ளி, 410 கிராம் இருந்தது. திருப்பணி உண்டியல் காணிக்கை, 79 ஆயிரத்து, 98 ரூபாய். இதற்கு முன், நிரந்தர உண்டியல், ஜூலை, 24ல் திறக்கப்பட்டதாக, கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.