பதிவு செய்த நாள்
24
ஆக
2019
04:08
தலைவாசல்: ஸ்தானுஷ்டமியையொட்டி, பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி, ஸ்தானுஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் ஆலயத்திலுள்ள, அஷ்ட பைரவர் சன்னிதானத்தில், நேற்று 23ல், சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து, பால், தயிர், நெய் ஆகியவற்றால், மூலவர் காமநாதீஸ்வரருக்கு, அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள், ஐந்து வகை எண்ணெய் ஊற்றி, தீபமேற்றி பைரவரை வழிப ட்டனர். பின், கோவிலிலுள்ள எட்டு பைரவர்களுக்கும், தனித்தனியாக சிறப்பு பூஜை நடந்தது. பெரிய நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம், பைரவர் சன்னதி யில், சிறப்பு யாகம் நடந்தது. மாலையில் நடந்த மஹா தீபாராதனையில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நன்மை வேண்டி...: ஆத்தூர், வசிஷ்டநதி, தென்கரை, கைலாசநாதர் கோவில் வளாகத்திலுள்ள, பிரித்தியங்கிராதேவி அம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி, சிறப்பு யாக பூஜை நடந்தது.
தொடர்ந்து, பிரித்தியங்கிரா தேவி அம்மன், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் காட்சி யளித்தார். ஏராளமானோர் வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்ம லேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில்களில், கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.