கிருஷ்ணகிரி: தேய்ப்பிறை அஷ்டமியையொட்டி, கிருஷ்ணகிரி பழையபேட்டை பெரிய ஏரி கோடிக்கரையில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று 23ல் சிறப்பு வழிபாடு நடந்தது. இதை யொட்டி, காலையில் கால பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், பூசணியில் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். பகல், 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கால பைரவரை, பக்தர்கள் நீண்ட வரிசை யில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.