ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு சுவாமிகள் வீதியுலா, உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல் நிகழ்ச்சிகள் நடந்தது.
இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை ஆண்டாள் கோயிலிலிருந்து கிருஷ்ணர், ருக்குமணி, சத்யபாமா கிருஷ்ணர் கோயிலுக்கு எழுந்தருளினர். அங்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து கோயிலுக்கு திரும்பினர். சுதர்சன் பட்டர் ஸ்ரீஜெயந்தி புராணம் வாசித்தார். இதை தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு கிருஷ்ணர் பிறப்பு வைபவம், சிறப்பு பூஜைகள் நடந்தது.நேற்றிரவு 8:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள், கிருஷ்ணர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தனர். அப்போது உறியடி உற்சவம் மற்றும் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்திருந்தனர்.