ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவில் விழா ஆக.,2 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில், சக்தி கரகம், தருமர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திருக்கல்யாணம், சக்ராபர்ண கோட்டை, சுபத்திரை கல்யாணம், அபிமன்யு பிறப்பு, தவசு கடப்பலி, படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.முக்கிய விழாவான பூக்குழி விழா நேற்று அதிகாலை 5:30 மணிக்கு நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், தீ மிதித்தும் நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். பின் மூலவர் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்துசமய மன்றத்தினர் செய்திருந்தனர்.