புதுச்சேரியில் களரி பெஸ்ட் 2012: கலை விழா தொடங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2012 10:03
புதுச்சேரி : புதுச்சேரியில் "களரி பெஸ்ட் 2012 கலை விழா நேற்று துவங்கியது. இந்துஸ்தான் களரி சங்கம் சார்பில் வைத்திக்குப்பம் கிர்ட்டாஷ்ரயா மையத்தில் "களரி பெஸ்ட் 2012 என்ற 3 நாள் கலை விழா நேற்று இரவு துவங்கியது. ஜெயப்பிரபா மேனன், கணபதி வணக்கம் மற்றும் மோகினி ஆட்டம் ஆடினார். முரளிதரன் குழுவினர் இசையின் மூலம் இறைவனை அடையும் வழி குறித்து செண்டை மேள நிகழ்ச்சி நடத்தினர். இதனையடுத்து "மெய்வழக்கம், கோல்தாரி, அங்கதாரி, கைமுறை ஆகிய நான்கு வகையான களரி ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதனை இடையன்சாவடி சாலை இந்துஸ்தான் களரி சங்க லட்சுமண் குருஜி நடத்தினார். கேரளாவின் மிகப்பழமையான பாரம்பரியமான "தெய்யம் என்ற நாட்டிய நிகழ்ச்சியை நாராயணன் குழுவினர் நடத்தினர். இதில் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரசித்தனர். இன்று ஆரோவில் பாரதி நிவாசிலும், நாளை இந்துஸ்தான் களரி சங்கத்திலும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.