பதிவு செய்த நாள்
26
ஆக
2019
12:08
சேலம்: செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், 23வது ஆண்டு உற்சவ விழா, 108 திருவிளக்குபூஜை, நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு, கணபதி ?ஹாமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, திரளான பெண்கள், மீனாட்சியம்மன் கோவிலிலிருந்து, பால்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து, மூலவர் மாரியம்மனுக்கு, அபிஷேகம் செய்து வழிபட்டனர். அனைவருக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு, 8:20 மணிக்கு, மூலவர் அம்மன், ராஜ, ராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அம்மனுக்கு நேர்எதிரே, இருபுறமும், பெண்கள் வரிசையாக அமர்ந்து, விளக்கில் தீபமேற்றி, திருவிளக்கு பூஜை செய்தனர். குருக்கள், வேத மந்திரம் ஓத, அதை, பக்தர்கள் உச்சரித்தபடி, திருவிளக்குக்கு, குங்குமத்தால் அர்ச்சனை செய்து, வழிபாடு நடந்தது.