கம்பம்:- கம்பத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (ஆக., 25ல்) விடிய விடியநடந்தது. 13 வயது சிறுவன் அதில் ஏறி பரிசை தட்டி சென்றான்.
கம்பம் யாதவர் மடாலயத்தில் உள்ள கோபாலகிருஷ்ணன்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் (ஆக., 25ல்) இரவு 9:00 மணிக்கு வேலப்பர் கோயில்முன்பாக வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி துவங்கியது.
விடியவிடிய நடந்த நிகழ்ச்சியில் நுாற்றுக்கணக்கில் இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறி தோல்வி யை சந்தித்தனர். இறுதியில் மாலையம்மாள்புரத்தை சேர்ந்த கிருத்திக் 13, என்ற சிறுவன் வழுக்கு மரத்தின் உச்சிக்கு ஏறி வெற்றி பெற்றான்.
அவனுக்கு யாதவர் சமுதாயம் சார்பாக சில்வர்அண்டா பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக கம்பராயப் பெருமாள் அலங்காரத்தில், கிருஷ்ணர் கோயிலில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.