பதிவு செய்த நாள்
31
மார்
2012
10:03
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், புதியதாக, கட்டப்பட்ட, யாகசாலை மண்டப திறப்பு விழா, நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம், குப்பிச்சிபாளையம் ரோட்டில், கரிவரதராஜ பெருமாள் கோவில், உள்ளது. இங்கு, ஆண்டு முழுவதும், வைணவத்தின் விழாக்கள், சிறப்புற கொண்டாடப்படும். விழாவின் போது, கோவில் நடுமண்டபத்தில் யாகங்கள், நடத்தப்பட்டு வந்தன. யாகம் நடத்த, கோவில் வளாகத்தில், தனியாக ஒரு இடத்தில், யாகசாலை அமைக்க, முடிவு செய்யப்பட்டது. புதிய யாகசாலை அமைக்கும் செலவை, பக்தர் ஒருவர் ஏற்றுக் கொண்டார். கட்டி முடிக்கப்பட்ட, புதிய யாகசாலை மண்டப திறப்பு விழாவுக்கு, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர், ராமகிருஷ்ண நாயுடு, தலைமை வகித்தார். யாகசாலை சிறப்புப் பூஜை, யாகம் ஆகியன நடந்தன. கலசத்துக்கு, கோவில் அர்ச்சகர் ரமணன், கும்பாபிஷேகம் செய்தார். யாகசாலை மண்டபத்தை, காரமடை கோவில் ஸ்தலத்தார் வேதவியா ஸ்ரீசுதர்சனப் பட்டர் சுவாமிகள், குலசேகர ஆழ்வார் ஆகியோர், திறந்து வைத்தனர். பங்களா நாராயணசாமி நாயுடு, சொக்கலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாக அறங்காவலர் சுந்தரம், ராமானுஜ கூடத்தின் நிர்வாகி பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.