பதிவு செய்த நாள்
28
ஆக
2019
12:08
துாத்துக்குடி, : இந்து கோயில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பை மீட்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என, இந்து சேனா கட்சியின் ஆலைய பாதுகாப்பு குழு தலைவர் நேற்று 27ல், கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்து சேனா கட்சியின் ஆலையப் பாதுகாப்பு குழு தலைவராக, துாத்துக்குடி, சித்தர் பீடத்தைச் சேர்ந்த சீனிவாச சித்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, இந்து சேனா கட்சியின் ஆலைய பாதுகாப்புகுழுத் தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். காஞ்சிபுரத்தில் அத்திவரதரை ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் தரிசித்திருப்பது ஆன்மிக வளர்ச்சியை காட்டுகிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஆன்மிக விழாக்கள் நடக்கும் போது, அரசு சிறப்பு கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.
துாத்துக்குடி திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடிப்படை வசதிகளை மேம் படுத்த வேண்டும். உள் பிரகார வெளிப்பிரகார கட்டிடப் பணிகளை விரைவில் கட்டி முடிக்க வேண்டும். விநாயகர் சதுார்த்திக்காக, தமிழகத்தில் புதிதாக பல இடங்களில் விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்ய காவல்துறையினர் கட்டுபாடுகளை விதிக்கின்றனர். ஆன்மிக சிந்த னை வளர்ந்து வரும் நிலையில், புதிய விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க வேண்டும். இந்து கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் உள்ளன. தமிழகம் முழு வதும் சுற்றுப்பயணம் செய்து இந்து கோயில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்துவருகிறேன். இது குறித்து அரசு தீவிர கவனம் செலுத்தி சொத்துக்ளை மீட்க வேண்டும். இது குறித்து விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரி வித்தார்.