பதிவு செய்த நாள்
29
ஆக
2019
02:08
சேலம்: சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 108 வைணவ திவ்ய தேச பெருமாள் சுதை சிற்பங்களை, ஒரே வளாகத்தில் அமைத்து, கடந்த ஜூலை, 11ல் கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, 48 நாள் மண்டல பூஜை தொடங்கி, தினமும், மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன் நிறைவு விழாவையொட்டி, நேற்று 28ல், காலை, 81 கலசம் வைத்து, சிறப்பு யாக பூஜை நடந்தது.
மதியம், பூர்ணாஹூதி நடத்தி, யாகத்தில் வைத்து பூஜித்த கலச புனிதநீரால், மூலவர் பெருமாளு க்கு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, திருவாராதனம், சாற்றுமுறை பூஜையுடன் நிறைவடைந்தது. இரவு, புஷ்ப பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர ராஜர், ராஜ அலங் காரத்தில் திருவீதி உலா வரச்செய்தனர்.