பதிவு செய்த நாள்
29
ஆக
2019
02:08
ஆத்தூர்: ஆத்தூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, 200 ஆண்டு பழமையான வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில், சிவன், துர்க்கை, முருகன், நவகிரகங்களின் சன்னதிகள் உள்ளன.
கடந்த, 2002, நவ., 10ல், கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, கும்பாபிஷேகம் நடத்த, கோவிலில், சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நன்கொடையாளர்கள், கோவில் நிர்வாக குழு மூலம், 60 லட்சம் ரூபாய்க்கு மேல் நன்கொடை பெறப்பட்டு, இரு மாதமாக, வெளிப்புற மண்டபம், ராஜகோபுரம், முருகன் கோவில் கோபுர கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஓராண்டுக்குள், இப்பணி நிறைவடைந்த பின், கும்பாபிஷேக பணி மேற்கொள்ளப்படும் என, அறநிலையத்துறை அலுவலர்கள் கூறினர்.