ஐதராபாத் : ஆந்திராவின் கைரதாபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வித்தியாசமான வடிவங்களில் மிக உயரமான விநாயகர் சிலைகள் நிறுவப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 61 அடி உயர விநாயகர் சிலை ஒன்று தயாராகி வருகிறது. சூரிய பகவானை ஒத்த இந்த விநாயகர் 12 தலைகள், 24 கைகளுடன், 7 குதிரைகளின் மீது உலா வருவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.