பதிவு செய்த நாள்
30
ஆக
2019
12:08
ஈரோடு: ஈரோடு, திருநகர் காலனி, நியூ ஸ்டேட் பேங்க் காலனி, செல்வவிநாயகர் கோவில், கும்பாபிஷேக விழா, செப்.,1ல் நடக்கிறது. விழா, 31ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
இதையடுத்து காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் கொண்டு வர செல்லுதல், மாலையில் விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பூஜை நடக்கிறது. செப்.,1ல் காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. காலை, 7:45 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது. செப்.,2 முதல் மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.