சேத்தூர் : சேத்தூர்-மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித்திருவிழா நடந்தது. சேத்தூர்-மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பூக்குழித்திருவிழா கடந்த 24ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.தினசரி அக்கினி சட்டி எடுக்கும் விழா நடந்தது. தினசரி அம்மன் வீதி உலா நடந்தது. ஏழாம் திருநாளன்று மாலை பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. காப்பு கட்டிய 693 பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பக்தர்களுக்கு பின்னால் முளைப்பாரி, ஆயிரங்கண்பானை எடுத்து வந்தனர்.இன்று பொங்கலிடும் நிகழ்ச்சியோடு விழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாட்டை கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாட்டை டி.எஸ்.பி., கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் நீர் ,மோர் வழங்கும் விழா நடந்தது. நகர செயலாளர் செல்வகுமார் தலைமையில் விழாவை எம்.எல்.ஏ கோபால்சாமி துவக்கி வைத்தார். விழாவில் ஊராட்சி துணைத் தலைவர் சுப்பிரமணியன்,மாவட்ட பிரதிநிதி பேச்சியப்பன். சந்தானமுத்து, ராமமுர்த்தி, சமுத்திரம் மற்றும்நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.