பதிவு செய்த நாள்
03
செப்
2019
03:09
அவிநாசி:அத்திக்கடவு -- அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி ’அத்திக்கடவு விநாயகர்’ சிலை வைத்து, வழிபாடு நடத்தப்பட்டது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டு கால கோரிக்கையான, அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி, 1652 கோடி ரூபாய் செலவில், சில மாதங்களுக்கு முன் துவங்கியது.இதற்காக, அவிநாசி ஊராட்சி ஒன்றிய எல்லையான சின்ன செட்டிபாளையத்தில், அத்திக்கடவு திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டி, கணபதி ஹோமத்துடன், விநாயகர் சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.